ஏசாயா 65:11காத் மேனி தெய்வங்கள்
ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை நிறையவார்க்கிறவர்களே,
Isaiah 65:11
காத் மேனி தெய்வங்கள்
காத் என்பது அதிர்ஷ்டத்தின் தேவனாகவும், மேனி என்பது விதியின் தேவனாகவும் அன்றைய கானானிய வழிபாட்டில் கருதப்பட்டன. தேவனுடைய பரிசுத்த மலையை மறந்து இவைகளுக்குப் பந்தி ஆயத்தப்படுத்திய ஜனங்களைக் குறித்து தேவன் இங்கே பேசுகிறார். சொந்த அதிர்ஷ்டத்தையும் விதியையும் நம்பி தேவனை மறந்தது எத்தனை பெருந்தவறு என்பதை இது காட்டுகிறது. இன்றும் நாம் நம்பும் பொருள்கள் எவ்வளவு தூரம் தேவனை மறக்கச் செய்கின்றன என்று சிந்திக்க வைக்கும் வசனம் இது.
