எரேமியா 11:13பட்டணங்களின் இலக்கம்
யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி.
Jeremiah 11:13
பட்டணங்களின் இலக்கம்
கர்த்தர் கசப்புடன் சொல்கிறார் - உன் பட்டணங்களின் எண்ணிக்கை எவ்வளவு, உன் தேவர்களின் எண்ணிக்கையும் அவ்வளவே! ஒவ்வொரு ஊரிலும் பாகாலுக்கு தூபங்காட்ட பீடங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன. இது இலச்சையான காரியம் என்று சொல்லப்படுகிறது - தேவனுக்குப் பதிலாக எண்ணற்ற பொருளற்ற விக்கிரகங்களை வழிபடும் அவமானம்.
