எரேமியா 31:37வானங்கள் அளக்கப்படலாம்
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயப்படவும் கூடுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Jeremiah 31:37
வானங்கள் அளக்கப்படலாம்
வானங்களை அளக்கவும், பூமியின் அஸ்திபாரங்களை ஆராயவும் முடியுமானால்தான், தமது ஜனத்தை முழுவதுமாய் வெறுத்துவிடுவேன் என்கிறார் - அதாவது இயலாத, சாத்தியமற்ற காரியம் என்ற பொருளில். இது ஒரு அழுத்தமான உறுதிமொழி, மனுஷனால் அளக்கவே முடியாத அளவுக்கு தேவனுடைய அன்பு உறுதியானது. தண்டித்தாலும், முழுமையாய் கைவிடமாட்டேன் என்ற உறுதி இது. இப்படிப்பட்ட உறுதிமொழி நமக்கும் பெரும் ஆறுதலைத் தருகிறது.
