எரேமியா 36:7பணிந்து விண்ணப்பிக்க
ஒருவேளை அவர்கள் கர்த்தருடைய முகத்துக்கு முன்பாகப் பணிந்து விண்ணப்பம்பண்ணி, அவரவர் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்புவார்கள்; கர்த்தர் இந்த ஜனத்துக்கு விரோதமாகக் கூறியிருக்கிற கோபமும் உக்கிரமும் பெரியது என்று சொன்னான்.
Jeremiah 36:7
பணிந்து விண்ணப்பிக்க
ஜனங்கள் இந்த வார்த்தைகளைக் கேட்டு கர்த்தருடைய முகத்திற்கு முன்பாக பணிந்து, தங்கள் பொல்லாத வழியை விட்டு திரும்புவார்கள் என்ற ஆசையுடன் எரேமியா இதைச் செய்கிறார். கர்த்தருடைய கோபமும் உக்கிரமும் பெரியது என்று அவரே அறிந்திருந்தாலும், அந்த கோபத்தைத் தணிக்கும் வாசல் இன்னும் திறந்திருக்கிறது என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. ஒரு தீர்க்கதரிசியின் இதயம் எப்போதும் நம்பிக்கையை விட்டுவிடாது, தன் ஜனத்தின் மேட்டு நல்லனவற்றை எதிர்பார்க்கும்.
