எரேமியா 5:26பதுங்கிய கண்ணிகள்
குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறது போல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.
Jeremiah 5:26
பதுங்கிய கண்ணிகள்
குருவி பிடிப்பவர்கள் பதுங்கியிருப்பதைப் போல, துன்மார்க்கர் மனிதரைப் பிடிக்க கண்ணிகளை வைத்திருந்தனர். சாதாரண குடிமக்களை ஏமாற்றி, சுரண்டி வாழும் தலைவர்களும் வர்த்தகர்களும் இருந்த நிலையை இது காட்டுகிறது. வலிமையுள்ளவர் வலிமையற்றவரை காக்க வேண்டியதற்கு மாறாக, ஏமாற்றி வாழ்ந்த நிலையின் வேதனை இது.
