எரேமியா 5:8கொழுத்த குதிரைகள்
அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.
Jeremiah 5:8
கொழுத்த குதிரைகள்
காலமே எழுந்து அயலான் மனைவியின் பின்னால் ஓடும் ஆண்களை, கட்டுப்பாடற்ற கொழுத்த குதிரைகளுடன் ஒப்பிடுகிறார் கர்த்தர். செழிப்பும் சுகபோகமும் இவர்களை தூண்டி, கட்டுப்பாடின்றி பாவத்தில் விழச்செய்தது. வாழ்வில் நாம் பெறும் நல்லவைகளை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது எப்போதும் முக்கியம்.
