யோவான் 13:17செய்தால் பாக்கியம்
நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள்.
John 13:17
செய்தால் பாக்கியம்
அறிந்திருப்பது மட்டும் போதாது, அதைச் செய்ய வேண்டும் என்று இயேசு தெளிவாகச் சொல்கிறார். அறிவும் செயலும் சேர்ந்தால்தான் அதிலிருந்து பாக்கியம் வரும். கால் கழுவும் பணிவைப் பற்றி அறிந்தும், நம் வாழ்வில் அதைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் அந்த அறிவுக்கு பயன் இல்லை. அறிந்ததை வாழ்வில் காட்டுவோமா.
