யோவான் 2:1கானாவூர் திருமணம்
மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள்.
John 2:1
கானாவூர் திருமணம்
மூன்றாம் நாள் என்று யோவான் சொல்கிறார் - யோர்தானில் இருந்து கலிலேயா வரும் பயணத்தில் இருந்து எண்ணினால் இது வரும். கானா என்பது சின்ன ஊர், நாசரேத்திற்கு அருகில். இயேசுவின் தாயார் மரியாள் அங்கே இருந்தார் என்று சொல்வது, குடும்பம் நெருக்கமாக பங்கு கொண்ட நிகழ்ச்சி என்று காட்டுகிறது. சாதாரண ஒரு கலியாணத்தில்தான் இயேசு தம் மகிமையை முதன்முதலில் காட்டப்போகிறார் என்பது எத்தனை அழகு.
