யோவான் 3:1இருளில் வந்த அதிகாரி
யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
John 3:1
இருளில் வந்த அதிகாரி
நிக்கொதேமு பரிசேயர் கூட்டத்தில் ஒரு பெரிய அதிகாரி, யூத ஆலோசனை சங்கத்தில் உறுப்பினர். மதத்தில் உயர்ந்த படிப்பும் மதிப்பும் பெற்றவர். இப்படி ஒரு பெரிய மனிதர் இயேசுவைத் தேடி வருகிறார் என்பதே இந்தக் கதையின் ஆச்சரியம். வெளியில் பெரிய பதவி இருந்தாலும், உள்ளத்தில் ஒரு தேடல் இருந்தது அவருக்கு.
