யோவான் 9:2யார் செய்த பாவம்?
அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
John 9:2
யார் செய்த பாவம்?
சீஷர்கள் அந்த மனுஷனைப் பார்த்தவுடன் முதலில் எழுந்த கேள்வி பாவத்தைப் பற்றியது. அக்காலத்தில் நோய், ஊனம் எல்லாம் யாருடைய பாவத்தின் விளைவு என்று எண்ணும் பழக்கம் இருந்தது. இவன் பிறவியிலேயே குருடனாக இருந்ததால், தந்தை தாய் செய்த பாவமோ என்று கேட்கிறார்கள். இப்படி துன்பத்தைப் பார்த்து உடனே குற்றத்தைத் தேடுவது மனித இயல்பு.
