யோசுவா 11:4கடற்கரை மணல் போல்
அவர்கள் கடற்கரை மணலைப்போல் ஏராளமான திரண்ட ஜனமாகிய தங்களுடைய எல்லாச் சேனைகளோடும், மகா ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடும்கூடப் புறப்பட்டார்கள்.
Joshua 11:4
கடற்கரை மணல் போல்
கடற்கரை மணலைப்போல ஏராளமான சேனையும், ஏராளமான குதிரைகளும் இரதங்களும் இந்தக் கூட்டணிப் படையில் இருந்தன. இஸ்ரவேலருக்கு இரதங்களே இல்லை, குதிரைப்படையும் இல்லை. மனுஷ கண்ணோக்கில் பார்த்தால் இது ஒரு வெல்லவே முடியாத சேனை. ஆனால் கர்த்தரோடு சேனையின் எண்ணிக்கை ஒரு பொருட்டல்ல என்பதை யோசுவா முன்பே கண்டிருந்தார்.
