யோசுவா 14:11முதுமையிலும் பெலன்
மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.
Joshua 14:11
முதுமையிலும் பெலன்
எண்பத்தைந்து வயதிலும் காலேபுக்கு நாற்பது வயதில் இருந்த அதே பெலனும் திடமும் இருந்தது என்று அவரே சொல்கிறார். யுத்தத்திற்குப் போகவும் வரவும் இப்போதும் தகுதியுள்ளவராக இருந்தார். வயது என்பது கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றுவதற்கு தடையாக இருக்கவில்லை என்பதற்கு காலேபின் வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம். மனதில் நம்பிக்கை இருந்தால், முதுமையும் ஒரு பலவீனமாகாது.
