யோசுவா 5:3ஆர்லோத் மேடு
அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான்.
Joshua 5:3
ஆர்லோத் மேடு
யோசுவா கர்த்தருடைய கட்டளையை உடனே நிறைவேற்றினார் என்று பாருங்கள். கருக்கான கத்திகளைத் தயார் செய்து, ஜனங்கள் அனைவரையும் விருத்தசேதனம் பண்ணினார். இந்த இடம் பின்பு ஆர்லோத் மேடு என்றே அழைக்கப்பட்டது, ஏனெனில் அங்கே தோல் அகற்றப்பட்டது. கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டவுடன் தாமதமில்லாமல் செய்யும் மனசாட்சி யோசுவாவிடம் இருந்தது.
