நியாயாதிபதிகள் 11:1தள்ளப்பட்டவன் யெப்தா
கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.
Judges 11:1
தள்ளப்பட்டவன் யெப்தா
யெப்தா பலத்த வீரன். ஆனால் அவருடைய பிறப்பே அவருக்கு ஒரு களங்கமாய் இருந்தது - அவர் பரஸ்திரீயின் மகன். உலகம் பார்வையில் அவருடைய வாழ்க்கை ஆரம்பமே ஒரு குறை கொண்டது. இருந்தும் தேவன் இப்படிப்பட்டவரையே பின்னால் இஸ்ரவேலின் விடுதலைக்காரராக தெரிந்துகொள்கிறார் என்பது நமக்கு ஆறுதலான உண்மை.
