நியாயாதிபதிகள் 6:1மீண்டும் அதே வழி
பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
Judges 6:1
மீண்டும் அதே வழி
இஸ்ரவேலர் மறுபடியும் கர்த்தரை மறந்து பொல்லாப்பானதைச் செய்தார்கள். எத்தனை முறை காப்பாற்றப்பட்டாலும் மனசு மாறாமல் இருந்ததைப் பாருங்கள். அதனால் கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார். இது தண்டனையாக இருந்தாலும், அவர்களை மீட்டுத் திருப்ப ஆண்டவர் அனுமதித்த ஒரு வழியே. நம் வாழ்விலும் தேவன் அனுமதிக்கும் கஷ்டங்கள் அவர் நம்மை மறந்ததால் அல்ல, திருப்புவதற்காகவே.
