நியாயாதிபதிகள் 6:5வெட்டுக்கிளிகள் போல்
அவர்கள் தங்கள் மிருகஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் வருவார்கள்; அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும்; இந்தப்பிரகாரமாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள்.
Judges 6:5
வெட்டுக்கிளிகள் போல்
மீதியானியரும் அவர்களோடு வந்தவரும் தங்கள் மிருகஜீவன்களோடும் கூடாரங்களோடும் வெட்டுக்கிளிகளைப் போல திரளாய் வந்தார்கள். எண்ணிமுடியாத ஒட்டகங்களோடு வந்து, தேசத்தை முற்றிலும் கெடுத்துவிடும் நோக்கத்தோடு வந்தார்கள். ஒரு வெட்டுக்கிளிக் கூட்டம் பயிரை மொத்தமாக விழுங்குவது போல, இந்தப் பகைவரும் நாட்டை வெறுமையாக்கினார்கள்.
