நியாயாதிபதிகள் 7:3இருபத்தீராயிரம் பேர் திரும்பினர்
ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது ஜனத்தில் இருபத்தீராயிரம் பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள்.
Judges 7:3
இருபத்தீராயிரம் பேர் திரும்பினர்
பயமும் திகிலும் உள்ளவர்கள் திரும்பிப்போகலாம் என்று கிதியோன் பிரசித்தப்படுத்தினார். அந்தச் சொல் கேட்டவுடன் இருபத்தீராயிரம் பேர் திரும்பிப் போய்விட்டார்கள், பதினாயிரம் பேர் மட்டும் மீதியாயினர். எத்தனை பேர் உள்ளூற உணர்ந்த பயத்தை மறைத்திருந்தார்களோ, தெரியாது. ஆனால் தேவன் தமது வேலைக்கு தூய்மையான, மனந்தளராத இதயங்களையே தேர்ந்துகொள்கிறார் என்பது இதில் தெரிகிறது.
