நியாயாதிபதிகள் 9:4பாகாலின் வெள்ளிக் காசு
அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரைச் சேவகத்தில் வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.
Judges 9:4
பாகாலின் வெள்ளிக் காசு
பாகால் பேரீத் என்ற பொய்த் தேவனின் கோவிலிலிருந்து வெள்ளிக்காசு எடுத்து அபிமெலேக்குக்குக் கொடுத்தனர். அந்தப் பணத்தால் வீணரும் போக்கிரிகளுமான ஆட்களைச் சேவகத்தில் வைத்தார். தேவனை மறந்த ஜனங்கள் தேவனற்ற வழிகளிலேயே தங்கள் தலைவனையும் தேர்ந்துகொள்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. தூய்மையற்ற அஸ்திவாரத்தின் மேல் கட்டப்படும் எதுவும் நிலைக்காது.
