புலம்பல் 1:12கவலையில்லையா?
வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா (அக்கறையில்லையா)? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.
Lamentations 1:12
கவலையில்லையா?
வழியில் நடந்து போகிறவர்களை நோக்கி எருசலேம் கேள்வி கேட்கிறாள் - என் துக்கத்தைப் பார்த்தும் உங்களுக்கு கவலையில்லையா என்று. கர்த்தர் தமது உக்கிரமான கோபத்தால் அவளை சஞ்சலப்படுத்தியதால் வந்த துக்கத்திற்கு ஒப்பான துக்கம் வேறு எங்கும் இல்லை என்று அவள் சொல்கிறாள். மற்றவரின் துக்கத்தை பார்த்து கடந்து செல்லாமல் அதில் பங்கு கொள்ளும் இதயம் நமக்கு வேண்டும் என்பதை இந்த ஏக்கம் நமக்குச் சொல்கிறது.
