புலம்பல் 4:17வீணான எதிர்பார்ப்பு
இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப் போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம்.
Lamentations 4:17
வீணான எதிர்பார்ப்பு
உதவி வருமென்று வானத்தை நோக்கி பார்த்துப் பார்த்து மக்களின் கண்களே பூத்துப்போயின. ஏகிப்து போன்ற பிற தேசங்களை நம்பி எதிர்பார்த்திருந்தார்கள், ஆனால் அவை காப்பாற்ற முடியாதவைகளாய் இருந்தன. மனித உதவியை நம்பி காத்திருந்த நாட்கள் வீணாய் முடிந்தன. இதைப் படிக்கும்போது, மனிதனிடம் மட்டுமே நம்பிக்கை வைப்பது எப்போதும் நம்மை ஏமாற்றி விடும் என்பதை நினைவுகூரலாம்.
