லேவியராகமம் 23:10முதற்பலனின் கதிர்க்கட்டு
நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள்.
Leviticus 23:10
முதற்பலனின் கதிர்க்கட்டு
கானான் தேசத்தில் அறுவடை செய்யும்போது, முதலாவது அறுத்த கதிர்க்கட்டை ஆசாரியனிடம் கொண்டுவரவேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஒரு விவசாயி முதல் அறுவடையை பார்க்கும்போது எவ்வளவு நன்றியுடன் இருப்பானோ, அதே நன்றியுணர்வை தேவனுக்கு காணிக்கையாக்குகிறான். எல்லாமே தேவனுடையது என்பதை உணர்ந்து, முதல் பலனை அவருக்கு திருப்பிக் கொடுக்கிறார்கள். இது கொடுப்பதின் ஆரம்பப் பாடம்.
