லூக்கா 1:18சகரியாவின் சந்தேகம்
அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன்; என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான்.
Luke 1:18
சகரியாவின் சந்தேகம்
இத்தனை பெரிய அறிவிப்பைக் கேட்ட சகரியா, ‘இதை நான் எதினால் அறிவேன்?’ என்று கேட்டுவிட்டார். வயதுசென்ற தன் நிலையையும், மனைவியின் நிலையையும் நினைத்து அவருக்கு நம்பிக்கை வரவில்லை. ஆசாரியராக, தேவனுடைய வார்த்தையை நிறைய அறிந்திருந்தும், அந்த நேரத்தில் தன் கண்முன் நடக்கிற அற்புதத்தை நம்ப மனது ஒப்பவில்லை. நம்முடைய அனுபவமும் இப்படித்தான், தேவன் பெரிய காரியம் சொல்லும்போது, மனித அறிவு உடனே சந்தேகிக்கும்.
