லூக்கா 12:3இருளில் பேசினதும் வெளிச்சம்
ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும்.
Luke 12:3
இருளில் பேசினதும் வெளிச்சம்
இரவில் அறையில் காதோடு காதாகச் சொன்ன ரகசியம் கூட ஒருநாள் வீட்டு மேல்கூரையிலிருந்து பறைசாற்றப்படும் என்கிறார் இயேசு. இது பரிசேயரின் மறைவான போலித்தன்மையையும், ஒவ்வொரு மனிதனின் மறைந்த வார்த்தைகளையும் குறிக்கிறது. நாம் யார் காணாதபோதும் என்ன பேசுகிறோமோ, அதுவே நம் உள்ளான மனுஷனாக இருக்கிறது. அதனால் இருளில் பேசுவதிலும் வெளிச்சத்தில் பேசுவதிலும் ஒரே உண்மை இருக்கட்டும்.
