லூக்கா 13:11பதினெட்டு வருட கூனி
அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
Luke 13:11
பதினெட்டு வருட கூனி
பதினெட்டு ஆண்டுகளாக ஒரு பெண் தன் முதுகை நிமிர்த்த முடியாமல் கூனி வளைந்து வாழ்ந்தாள். ஒரு தீய ஆவி அவளை பலவீனப்படுத்தி இருந்தது என்று வேதம் சொல்கிறது. நினைத்துப் பாருங்கள், தன் முகத்தை உயர்த்தி ஆகாயத்தை பார்க்க கூட முடியாத அந்த வாழ்க்கை எப்படி இருந்திருக்கும். இத்தனை வருடங்கள் தாங்கியவளுக்கு, விடுதலை நாள் நெருங்கி வந்திருந்தது.
