லூக்கா 13:4சீலோவாம் கோபுரம்
சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
Luke 13:4
சீலோவாம் கோபுரம்
சீலோவாம் என்ற இடத்தில் ஒரு கோபுரம் திடீரென விழுந்து பதினெட்டுப்பேரை கொன்றது, அது ஒரு விபத்து. அந்நாளில் இதுவும் ஒரு பெரிய பேச்சுப் பொருளாக இருந்திருக்கும். மக்கள் அந்த பதினெட்டுப்பேரும் மற்ற எருசலேம் மக்களைவிட பாவிகள் என்று நினைத்தனர். இயேசு இந்த எண்ணத்தையும் மறுக்கிறார். ஒரு விபத்து யாரோ ஒருவரின் தனிப்பட்ட பாவத்தினால் மட்டும் வருவதில்லை.
