லூக்கா 15:26என்ன நடக்கிறது?
ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
Luke 15:26
என்ன நடக்கிறது?
மூத்த மகன் ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து விசாரிக்கிறான் - இதென்ன கொண்டாட்டம் என்று. அவனுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த கொண்டாட்டம் நடப்பது வெளிப்படையான ஒரு சிறு அசௌகரியத்தையும் காட்டுகிறது. அவன் விசாரிக்கும் விதத்தில் ஆர்வத்தோடு வேறு ஏதோ ஒரு உணர்வும் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை அறிய அவனுக்கு ஆவல்.
