லூக்கா 16:24ஒரு துளி நீருக்காக
அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.
Luke 16:24
ஒரு துளி நீருக்காக
செல்வந்தன் ஆபிரகாமிடம் கூப்பிட்டு, லாசருவை அனுப்பி தன் நாவைக் குளிரப்பண்ணும்படி ஒரு துளி நீரையாவது தரும்படி கேட்கிறான். ஒரு காலத்தில் மேஜையில் இருந்து விழும் துணிக்கைக்காக ஏங்கிய லாசருவின் நிலையை, இப்போது இந்தச் செல்வந்தனே அனுபவிக்கிறான். இந்த மாற்றம் நமக்கு அஞ்சி இருக்கும்படியான ஒரு உண்மையைச் சொல்கிறது.
