லூக்கா 22:1பஸ்கா நாள் நெருங்கியது
பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று.
Luke 22:1
பஸ்கா நாள் நெருங்கியது
எகிப்திலிருந்து இஸ்ரவேலரை தேவன் விடுவித்ததை நினைவுகூரும் பண்டிகை இது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் எருசலேமுக்கு வருவார்கள். இந்தப் பண்டிகைக்குள்ளாகவே இயேசுவின் சிலுவைப் பாடு நடக்கவிருந்தது. பழைய பஸ்கா ஆட்டுக்குட்டி நிழலாக, புதிய பஸ்காவாகிய இயேசு இப்போது நிஜமாக நிறைவேற இருந்தார். தேவனுடைய திட்டம் காலப்படி, நேரப்படி நிறைவேறுவதைக் காண்கிறோம்.
