லூக்கா 23:10பிடிவாதமான குற்றச்சாட்டு
பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள்.
Luke 23:10
பிடிவாதமான குற்றச்சாட்டு
ஏரோதுவின் அரண்மனையிலும் அமைதி இல்லை; பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அங்கேயும் பின்தொடர்ந்து பிடிவாதமாக குற்றம் சாட்டிக்கொண்டேயிருந்தார்கள். இயேசுவை எப்படியும் அழிக்க வேண்டும் என்ற அவர்களது தீர்மானம் இடம் மாறினாலும் மாறவில்லை. ஒரு தலமாற்றத்தால் ஒருவரது கெட்ட எண்ணம் மாறாது என்பதை இங்கே காண்கிறோம்.
