லூக்கா 23:50உத்தமன் யோசேப்பு
யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான்.
Luke 23:50
உத்தமன் யோசேப்பு
யோசேப்பு என்பவர் யூத ஆலோசனை சங்கத்தில் இருந்த ஒரு உயர்ந்த மனுஷர். லூக்கா அவரை 'உத்தமனும் நீதிமானும்' என்று அறிமுகப்படுத்துகிறார். இயேசுவைக் கொல்ல முடிவெடுத்த சங்கத்தில் இருந்தும், அவர் மனசாட்சி தூய்மையாக இருந்தது. கூட்டத்தின் அபிப்பிராயத்திற்கு எதிராகவும் நல்ல மனுஷராக இருக்க முடியும் என்பதை அவர் காட்டுகிறார்.
