லூக்கா 7:12கைம்பெண்ணின் ஒரே மகன்
அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள்.
Luke 7:12
கைம்பெண்ணின் ஒரே மகன்
ஊரின் வாசலிலேயே ஒரு சவப்பெட்டி - மரித்துப்போன ஒரு இளைஞனை அடக்கம் பண்ணும்படி கொண்டுவந்தார்கள். அவன் தன் தாய்க்கு ஒரே மகன், அந்தத் தாயும் கைம்பெண். இந்தத் தாய்க்கு இது இரட்டை துயரம் - கணவனை இழந்தவள், இப்போது தன் ஒரே ஆதரவையும் இழந்திருக்கிறாள். ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடன் அழுது கூடவே வந்தார்கள்.
