மல்கியா 1:13எவ்வளவு வருத்தம்
இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு திரணமாய்ப் பேசி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனா என்று கர்த்தர் கேட்கிறார்.
Malachi 1:13
எவ்வளவு வருத்தம்
தங்கள் காணிக்கையைக் கொடுக்கும்போது, இந்தச் சிரமமும் வருத்தமும் என்று முணுமுணுத்தார்கள் - அவர்கள் இதயத்தில் தேவனுக்குக் கொடுப்பது ஒரு பாரமாகவே இருந்தது. கிழிந்த, ஊனமான, நோய்பிடித்த மிருகங்களை கொண்டுவந்து, அதை நான் ஏற்றுக்கொள்வேனா என்று தேவனே கேட்கிறார். மனது சிரமப்பட்டு கொடுக்கும் காணிக்கை, தேவனுக்கு மகிழ்ச்சி தராது என்பதை இது நினைவூட்டுகிறது.
