மல்கியா 3:14வீணான ஊழியமா
தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும் சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்?
Malachi 3:14
வீணான ஊழியமா
தேவனுக்கு ஊழியம் செய்வதும், அவர் கட்டளைகளை கைக்கொள்வதும் வீணாய் போய்விட்டது என்று மக்கள் முறுமுறுத்தார்கள். துக்கத்தோடு நடந்தும் எந்த பலனும் இல்லை என்று அவர்கள் நினைத்தார்கள். வெளிப்படையாக நல்லவர்களாய் வாழ்ந்தும் வாழ்வில் நன்மை காணாதது ஏமாற்றம் தரும் என்பது புரிந்துகொள்ளக்கூடியதுதான். ஆனால் இந்த முறுமுறுப்பே அவர்கள் தேவனை உண்மையான அன்பினால் அல்ல, லாபத்தை எதிர்பார்த்தே சேவித்தார்கள் என்பதை காட்டுகிறது.
