மல்கியா 3:7திரும்புங்கள் என்ற அழைப்பு
நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள்,
Malachi 3:7
திரும்புங்கள் என்ற அழைப்பு
பிதாக்களின் காலத்தில் இருந்தே கட்டளைகளை விட்டு விலகிப்போன மக்களை கர்த்தர் அழைக்கிறார், என்னிடத்திற்கு திரும்புங்கள் என்று. ஆனால் மக்களோ கேள்வி கேட்கிறார்கள், நாங்கள் எந்த விஷயத்தில் திரும்ப வேண்டும் என்று. இந்த கேள்வியே அவர்கள் தங்கள் நிலையை உணராமல் இருந்ததைக் காட்டுகிறது. கர்த்தர் திரும்புவதற்கு தயாராய் இருக்கிறார், நாமும் நம் பக்கத்தில் அந்த திருப்பத்தை செய்ய வேண்டும் என்பதே இதன் அழைப்பு.
