மாற்கு 10:41எரிச்சலான பத்துப்பேர்
மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள்.
Mark 10:41
எரிச்சலான பத்துப்பேர்
யாக்கோபும் யோவானும் முதலிடம் கேட்டதைக் கேட்டவுடன், மற்ற பத்து சீஷர்களுக்கும் மனசு கோணிவிட்டது. ஏன் தெரியுமா? அவர்களுக்குள்ளும் அதே ஆசை மறைந்திருந்தது. மேலிடம் கேட்டவரை மட்டும் குறை சொல்கிறார்கள், தங்கள் மனசையும் பார்க்கவில்லை. இப்படித்தான் நம் வீட்டிலும், நம் மனசுக்குள்ளும் நடக்கும் சின்ன பொறாமைகள்.
