மாற்கு 10:47தாவீதின் குமாரனே
அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத்தொடங்கினான்.
Mark 10:47
தாவீதின் குமாரனே
நசரேயனாகிய இயேசு வருகிறார் என்று கேட்டவுடன் பர்திமேயு அமைதியாக இருக்கவில்லை. 'இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்' என்று உரக்க கூப்பிட்டான். குருடனாக இருந்தும் அவனது உள்ளக்கண் இயேசுவை மேசியாவாக, தாவீதின் வாக்குப்பண்ணப்பட்ட சந்ததியாக அடையாளம் கண்டது. பார்வை இல்லாதவனுக்கு விசுவாசக்கண் இருந்தது.
