மாற்கு 11:9ஓசன்னா ஆர்ப்பரிப்பு
முன்நடப்பாரும், பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்,
Mark 11:9
ஓசன்னா ஆர்ப்பரிப்பு
‘ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்’ என்று மக்கள் ஆர்ப்பரித்தது சங்கீதம் 118:26 இல் இருந்து எடுத்த வார்த்தைகள். ‘ஓசன்னா’ என்றால் ‘இரட்சியும்’ என்ற அர்த்தமுள்ள கூக்குரல். மக்கள் இயேசுவை தேவனுடைய பெயரால் வரும் மீட்பராகவே அறிந்திருந்தார்கள், ஆனாலும் அவருடைய மீட்பின் தன்மையை முழுவதுமாக அறியவில்லை.
