மாற்கு 14:64மரணத்திற்குப் பாத்திரன்
தேவதூஷணத்தைக் கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
Mark 14:64
மரணத்திற்குப் பாத்திரன்
பிரதான ஆசாரியன் மற்றவர்களை நோக்கி என்ன தோன்றுகிறது என்று கேட்டான், அவர்கள் எல்லாரும் ஒருமித்து இயேசு மரணத்திற்குப் பாத்திரன் என்று தீர்மானித்தார்கள். மெய்யான தேவனுடைய குமாரனை அறிக்கை செய்ததற்காகவே அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்த அநியாயமான தீர்ப்பு நமக்கு வேதனை தந்தாலும், இதன் மூலமே தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் நிறைவேறியது என்பதை நினைவில் கொள்வோம்.
