மாற்கு 6:23ராஜ்யம் பாதி தருவேன்
நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும் அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான்.
Mark 6:23
ராஜ்யம் பாதி தருவேன்
தன் ராஜ்யத்தில் பாதியானாலும் தருவேன் என்று ஆணையிட்டான் ஏரோது. இது வெறும் மிகைப்படுத்தலான வார்த்தையாக இருந்திருக்கலாம், ஆனால் அதன் விளைவு பயங்கரமாக இருந்தது. மனிதர் முன் தன் பேச்சை நிலைநிற்கவைக்க வேண்டும் என்ற பெருமையே அவனை கட்டுப்படுத்தியது.
