மாற்கு 6:3தச்சன் மகன் என்று
இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள்.
Mark 6:3
தச்சன் மகன் என்று
மரியாளின் மகன், தச்சன், தங்கள் ஊர் பிள்ளை என்று அறிந்தவர்கள், அவரை தீர்க்கதரிசியாக ஏற்றுக்கொள்ள மனது வரவில்லை. அறிமுகம் அதிகமாகும்போதுதான் சிலநேரம் மதிப்பு குறைந்துவிடும் என்பது வித்தியாசமான உண்மை. அவரைக் குறித்து இடறலடைந்தார்கள் என்று வசனம் சொல்கிறது - அதாவது அவரை ஏற்க மனசாட்சி தடையாக இருந்தது.
