மத்தேயு 14:1ஏரோதின் காதுகளில் ஒலி
அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு,
Matthew 14:1
ஏரோதின் காதுகளில் ஒலி
ஏரோது ஒரு சிற்றரசன், ரோமருக்குக் கீழ் காற்பங்கு தேசத்தை ஆண்டவன். இயேசுவின் புகழ் எங்கும் பரவி அவன் காதுகளிலும் விழுந்தது. அரண்மனையில் இருந்தாலும் அவனுடைய மனசாட்சி அமைதியாக இல்லை என்பது இனி வரும் வசனங்களில் தெரியவரும். வெளியே அதிகாரம் இருந்தாலும் உள்ளுக்குள் பயமும் குற்ற உணர்வும் அவனை அலைக்கழித்தது.
