மத்தேயு 14:13தனிமையை நோக்கி
இயேசு அதைக்கேட்டு அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள்.
Matthew 14:13
தனிமையை நோக்கி
யோவானுடைய மரணச் செய்தி கேட்டதும் இயேசு அந்த இடத்தை விட்டு படவில் ஏறி வனாந்தரத்திற்குச் சென்றார். ஒரு அன்பான உறவினரையும், தேவனுடைய பணியில் தம்முடன் இருந்த ஒருவரையும் இழந்த துக்கத்தில் அவருக்கும் தனிமை தேவைப்பட்டது. ஆனாலும் ஜனங்கள் அவரை விட்டு விலகவில்லை; காலால் நடந்தே அவரைத் தேடிச் சென்றார்கள். மக்களின் தேவை இயேசுவின் சொந்த துக்கத்தையும் விஞ்சிச் செல்வதை நாம் அடுத்த வசனத்தில் காண்போம்.
