மத்தேயு 14:9துக்கத்திலும் கீழ்படிதல்
ராஜா துக்கமடைந்தான். ஆகிலும் ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக் கட்டளையிட்டு,
Matthew 14:9
துக்கத்திலும் கீழ்படிதல்
ஏரோது துக்கமடைந்தான் என்று வசனம் சொல்கிறது; அவனுக்குள் ஒரு மனசாட்சி இன்னும் இருந்தது போலும். ஆனாலும் தன் ஆணைக்கும் விருந்தினர் முன் மானத்திற்கும் அஞ்சி, சரியானதைச் செய்யாமல் தவறானதையே கட்டளையிட்டான். மனித அபிப்பிராயத்திற்கும் பெருமைக்கும் பயந்து சரியானதை விட்டுவிடுவது எத்தனை பேரையும் அழிவுக்கு இழுத்துச் சென்றிருக்கிறது. துக்கம் இருந்தும் தைரியம் இல்லாதவனாக ஏரோது இருந்தான்.
