மத்தேயு 18:1பெரியவன் யார்?
அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.
Matthew 18:1
பெரியவன் யார்?
சீஷர்கள் வந்து இயேசுவைக் கேட்ட கேள்வி இதுதான் - பரலோகராஜ்யத்தில் யார் பெரியவனாக இருப்பார்? அவர்கள் மனசில் இன்னும் உலக மரியாதை, பதவி நினைவுகள் இருந்தன. யார் முதலிடம் பெறுவார் என்ற போட்டி மனசு அவர்களுக்குள் இருந்தது. இந்தக் கேள்விக்கு இயேசு கொடுத்த பதில் அவர்கள் எதிர்பார்த்ததற்கு நேர் மாற்றமாக இருந்தது.
