மத்தேயு 2:3கலங்கின எருசலேம்
ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.
Matthew 2:3
கலங்கின எருசலேம்
ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் என்ற வார்த்தை ஏரோதின் காதில் விழுந்ததும், அவனுக்கு பயம் பிடித்துக் கொண்டது. தன் அரியணைக்கு ஆபத்து வருகிறதோ என்று நினைத்தான். அவனோடு எருசலேம் நகரத்தார் எல்லாரும் கலங்கினார்கள் என்பது, அவனது கொடுங்கோலாட்சியை அவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. ஒரு குழந்தை பிறந்த செய்தி, மனுஷ அதிகாரத்தை இத்தனை அதிரவைக்கும் என்று யார் நினைத்திருப்பார்கள்.
