நெகேமியா 9:35தயையில் இருந்தும்
அவர்கள் தங்கள் ராஜ்யத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயையிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் துர்க்கருமங்களை விட்டுத் திரும்பாமலும் போனார்கள்.
Nehemiah 9:35
தயையில் இருந்தும்
தங்கள் ராஜ்யத்திலும், தேவனுடைய பெரிய தயையிலும், விசாலமும் செழிப்புமான தேசத்திலும் இருந்தபோதும், அவருக்கு ஊழியம் செய்யாமலும் துர்க்கருமங்களை விட்டு திரும்பாமலும் போனார்கள். எவ்வளவு அதிகமாய் தேவன் கொடுத்தாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அவரை மறந்தார்கள். செல்வம் நமக்கு தேவனை நினைவூட்டவேண்டும், மறக்கடிக்கக்கூடாது. இந்த வேதனை நிறைந்த ஒப்புதலில் இதே பாடம் காணப்படுகிறது.
