எண்ணாகமம் 16:22மோசேயின் பரிந்துரை
அப்பொழுது அவர்கள் முகங்குப்புறவிழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள்.
Numbers 16:22
மோசேயின் பரிந்துரை
மோசேயும் ஆரோனும் முகங்குப்புற விழுந்து, ‘ஒரு மனிதன் பாவம் செய்திருக்க சபையார் எல்லார் மேலும் கடுங்கோபம் கொள்வீரோ’ என்று மன்றாடினார்கள். குற்றவாளிகளுக்காக அல்ல, அவர்களுடன் தொடர்பில்லாத அப்பாவி மக்களுக்காக பரிந்துரை செய்தார்கள். தலைவனாக இருப்பவர் தன் மக்களுக்காக நடுவே நின்று பரிந்துரை செய்யும் அழகான உதாரணம் இது.
