எண்ணாகமம் 26:11கோராகின் பிள்ளைகள் தப்பினார்கள்
கோராகின் குமாரரோ சாகவில்லை.
Numbers 26:11
கோராகின் பிள்ளைகள் தப்பினார்கள்
தகப்பன் செய்த பாபத்தால் பிள்ளைகள் அழிக்கப்படவில்லை என்பது இந்த சிறு வசனத்தில் அடங்கியிருக்கும் பெரும் இரக்கம். கோராகின் குமாரர் சாகவில்லை என்று குறிப்பாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் பிற்காலத்தில் இந்த வம்சத்தில் இருந்தே பாடல் எழுதுவோர் தோன்றினார்கள் - சங்கீதங்களில் 'கோராகின் புத்திரர்' என்று காணலாம். தேவன் நியாயம் செய்யும்போதும் இரக்கத்தை மறக்கவில்லை.
