எண்ணாகமம் 32:17முன்னே நடப்போம்
நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தாரய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.
Numbers 32:17
முன்னே நடப்போம்
தங்கள் குடும்பங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு, தாங்கள் யுத்தசன்னத்தராகி மற்ற இஸ்ரவேலருக்கு முன்பாகவே தீவிரத்தோடு நடப்போம் என்று உறுதி கொடுக்கிறார்கள். சுயநலமான கோரிக்கையல்ல, ஒரு உண்மையான உறுதிமொழி இது. வார்த்தையை மட்டும் சொல்லாமல், அதற்கேற்ற செயலையும் அவர்கள் வாக்குறுதியில் சேர்த்தார்கள்.
