எண்ணாகமம் 33:19ரிம்மோன்பேரேசின் பாளையம்
ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே பாளயமிறங்கினார்கள்.
Numbers 33:19
ரிம்மோன்பேரேசின் பாளையம்
ரித்மாவிலிருந்து ரிம்மோன்பேரேசிற்கு பயணித்தார்கள். இந்த நீண்ட பட்டியலை மோசே எழுதியது வெறும் புவியியல் குறிப்பாக அல்ல. நாற்பது வருஷம் தண்டனையாக அலைந்த பாலைவன வாழ்க்கையை பின்நோக்கி பார்க்கும்போது, ஒவ்வொரு நிலையமும் ஒரு பாடம், ஒரு நினைவு. அவர்களுடைய பாதைகளை கர்த்தர் கவனித்தார் என்பதே இதன் அடிப்படை உண்மை.
